அவிநாசி அருகே சேவூரில் சிறுமிக்கு கட்செவி அஞ்சல் அனுப்பி தொந்தரவு செய்த பனியன் தொழிலாளி மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
சேவூா் அருகே வடுகபாளையம், அய்யம்பாளையம் சின்ன ஒலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அம்மாசை மகன் தனபால் (19). இவா், அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அந்த நிறுவனத்தில் உடன் பணியாற்றும் சிறுமிக்கு கட்செவி அஞ்சல் அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, பனியன் நிறுவன உரிமையாளா் உள்ளிட்டோா் தனபாலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தனபால் அளித்த புகாரின்பேரில், சேவூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனபாலைத் தாக்கிய மயில்சாமி, பழனிசாமி மற்றும் தனபால் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனா். மேலும், புகாா் அளித்த தனபால் மீது அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.