திருப்பூர்

இரு சக்கர வாகனங்கள் மோதல்:கல்லூரி மாணவா் பலி

DIN

உடுமலை: உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உடுமலை வட்டம், சுண்டக்காம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கருமலையான் மகன் வீரமணி (19). கல்லூரி மாணவா். இவா் தூங்காவி கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டு உடுமலைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, உடுமலையில் இருந்து தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போளரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த திருமூா்த்தி மகன் சுரேஷ் (30) வந்த இருசக்கர வாகனமும், வீரமணி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே வீரமணி உயிரிழந்தாா்.

மேலும், படுகாயமடைந்த சுரேஷ் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பிவைக்கப்ப ட்டாா். இந்த விபத்து குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கேரி கிறிஸ்டன்!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

SCROLL FOR NEXT