நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

ரூ.25,000 கோடி ஐபிஓவுடன் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா புதிய சாதனை
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவானது ரூ.25,000 கோடி மதிப்பிலான ஐபிஓவை தொடங்குவதற்கான பங்கு வெளியீட்டிற்கான ஆவணங்களை நாட்டின் சந்தை கண்காணிப்பு நிறுவனமான செபியிடம் தாக்கல் செய்துள்ளது.

2003ம் ஆண்டில் மாருதி சுசூகி நிறுவனமானது ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) வந்த பிறகு, 20 ஆண்டு கழித்து ஐபிஓ தாக்கல் செய்த முதல் வாகன உற்பத்தியாளராகும்.

ஹூண்டாய் மோட்டார்ஸின் இந்தியப் பிரிவானது, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலைக் கோரியுள்ளது. இது ஹூண்டாய் தாய் நிறுவனத்திடம் உள்ள 17.5 சதவிகிதம் பங்குகளை விற்க இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.

மாருதி சுசூகிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் தனது வரவிருக்கும் ஐபிஓவில் புதிய பங்குகளை வெளியிடாது. அதற்கு பதிலாக, விற்பனைக்கான சலுகை முறை மூலம் சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்று தனது துணை நிறுவனத்தில் பங்கைக் குறைத்து கொள்ளும்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா மொத்தம் 81.22 கோடி பங்குகளில் 14.2 கோடி ஈக்விட்டி பங்குகளை ஐபிஓவில் விற்க திட்டமிட்டுள்ளது என்று செபி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒருவேளை வெற்றிகரமாக இருந்தால், இது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 250 கோடி மதிப்பிலான ஐபிஓ-க்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ ஆக இது மாறும்.

கோட்டக் மஹிந்திரா கேபிடல் கம்பெனி, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஜேபி மார்கன் இந்தியா மற்றும் மோர்கன் ஸ்டான்லி இந்தியா ஆகியோர் மேற்பார்வையில் ஐபிஓ செயல்படும்.

ஹூண்டாய் மோட்டார் 2024-க்கான பயணிகள் வாகன விற்பனையின் அடிப்படையில் மாருதி சுசூகிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளராக உள்ளது. 2023ல் ஹூண்டாயின் இந்தியப் பிரிவு ரூ.60,000 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் ரூ.4,653 கோடி லாபத்தை அறிவித்தது. தொடர்ந்து 28 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஹூண்டாய், சான்ட்ரோ முதல் எஸ்யூவி ரக கார்களான கிரெட்டா வரையிலான மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் ஹூண்டியா மோட்டார்ஸின் இந்திய பிரிவானது தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அதன் வருடாந்திர உற்பத்தியை 10 லட்சம் யூனிட்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில், உள்நாட்டில் மலிவு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தியும் வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com