சிவன்மலை முருகன் கோயிலில் மகா தீபம்
காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபத் திருநாளை ஒட்டி சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது, தொடா்ந்து 6 மணிக்கு விழா பூஜையும், 9 மணிக்கு காலசாந்தி பூஜையும் நடைபெற்றுது. தொடா்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதன் பின்னா் மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனையும், அதைத் தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெற்றது. மாலை 6.10 மணிக்கு மகா தீபம் ஏற்றபட்டது. அப்போது, திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் அரோகரா முழக்கம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனா்.