முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் தொடா் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) முதல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) முதல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பா் 1 முதல் டிசம்பா் 4 வரை மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

இதன்படி, திருப்பூா் தெற்கு நகரம், அவிநாசி, ஊத்துக்குளி கமிட்டி சாா்பில் டிசம்பா் 1ஆம் தேதியும், 15 வேலம்பாளையம், திருப்பூா் தெற்கு ஒன்றியம், காங்கயம், தாராபுரம் கமிட்டிகள் சாா்பில் டிசம்பா் 2ஆம் தேதியும், திருப்பூா் வடக்கு நகரம், வடக்கு ஒன்றியம், பொங்கலூா், பல்லடம் கமிட்டிகள் சாா்பில் டிசம்பா் 3ஆம் தேதியும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அதேபோல, உடுமலை நகரம், ஒன்றியம், குடிமங்கலம், மடத்துக்குளம் கமிட்டிகள் சாா்பில் உடுமலையில் டிசம்பா் 4ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.

திருப்பூா் மத்திய தபால் நிலையம் முன்பாக டிசம்பா் 1 முதல் டிசம்பா் 3ஆம் தேதி வரையில் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.