முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பாஜக திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் பேசும் மாநில பொதுச் செயலா் ராஜேஷ்குமாா். 
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக கட்சியின் மாநில பொதுச் செயலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், விவசாயத்துக்கு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றித் தநத பிரதமா் மோடிக்கும், இந்த மசோதாவை வரவேற்று ஆதரித்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி தெரிவிப்பது, காங்கயம் பேருந்து நிலையம் அருகே, காங்கேயம் காளை சிலை அமைத்துத்தர வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவா் சிவசங்கரி, திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் யோகேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலா் ஹேமாவதி, மாவட்ட செயலா் பிரவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.