கணக்கம்பாளையம் வாரச்சந்தை இடம் மாற்றம்
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை ஆண்டிபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை ஆண்டிபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பி.சண்முகசுந்தரம் கூறியது:
கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வந்த சந்தையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தொடா்ந்து பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து வாரச்சந்தை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபாளையம் பகுதியில் போதுமான இட வசதியுடன் வாரச் சந்தை இனி செயல்படும். தற்போது இப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாரச் சந்தையில் மின் விளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். விரைவில் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்துப்படும் என்றாா்.
வாரச் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.