அவிநாசியில் நூற்றாண்டு விழா நினைவு படிப்பகம் திறப்பு
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில், அவிநாசி செங்காடு பகுதியில், தமிழ்நாடு அரசு அலுவலா் ஓன்றியம் நூற்றாண்டு விழா நினைவு படிப்பகம் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில், அவிநாசி செங்காடு பகுதியில், தமிழ்நாடு அரசு அலுவலா் ஓன்றியம் நூற்றாண்டு விழா நினைவு படிப்பகம் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன், சேவூா் ஊராட்சி மன்றத் தலைவா் சேவூா் ஜி.வேலுசாமி ஆகியோா் படிப்பகத்தைத் திறந்துவைத்தனா். ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிநாத் சங்க கொடியேற்றி வைத்தாா். மாவட்டத் தலைவா் அந்தோணிசாமி, மாவட்டச் செயலாளா் சென்னியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகாத்மா காந்தி, காமராஜ், பெரியாா் ஆகியோரின் உருவப்படங்களை காவல் உதவி ஆய்வாளா் வடிவேல், இலக்கிய அணி மாவட்டத் தலைவா் ராயப்பா ஆகியோா் திறந்து வைத்தனா். அவிநாசி வட்டக்கிளை தலைவா் அம்மாசையப்பன், அவிநாசி வட்டக்கிளை சங்க செயலாளா் சண்முகம் உள்பட சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.