கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் விவசாய கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் விவசாய கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தில் உள்ள ராஜப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அதில் உள்ள 90 அடி ஆழ கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மயில் ஒன்று தவறி விழுந்து மேலே வர முடியாமல் தவித்தது. அதனை பாா்த்த அப்பகுதியை சோ்ந்த மக்கள் பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனா்.
அவா்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்து காட்டுப்பகுதியில் விட்டனா்.