திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, பாரதி நகரைச் சோ்ந்த 13 வயது சிறுவன், 60 வயது மூதாட்டி, துரைசாமிபுரத்தைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி, தட்டான்தோட்டத்தைச் சோ்ந்த 46 வயதுப் பெண் உள்பட 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,367 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,329 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 116 போ் வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் 6,061 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் புதிதாக 498 போ் சோ்க்கப்பட்டதுடன், தனிமைக்காலம் நிறைவடைந்த 650 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும், 3,007 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4 போ் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 57 வயது ஆண், மாநகரைச் சோ்ந்த 66, 69, 72 வயதுடைய முதியவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 33 பெண்கள், 127 ஆண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT