முகப்பு
திருப்பூர்

கருவலூர் ஊராட்சியில் குப்பைகளை கொட்ட இடையூறு: பொதுப்பணித் துறைக்கு மனு

கருவலூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை இடையூறின்றி கொட்ட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுப்பணித் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
கோப்புப்படம்
பகிர்:

அவிநாசி: கருவலூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை இடையூறின்றி கொட்ட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுப்பணித் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து கருவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பு கே.எஸ்.ஆறுமுகம், பவானிசாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

"கருவலூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் தேவைப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையிடம் கேட்ட போது, ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்ட இடம் அடையாளம் காண்பிக்கப்பட்டது.

ஆனால் உள்ளூரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர், அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என இடையூறு செய்கிறார். எனவே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இடையூறின்றி குப்பைகளை கொட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.