திருப்பூர்

கூட்டுறவு சங்கத்தில் கடன் கேட்டு பெண்கள் மனு

DIN

சேவூா் அருகே உள்ள வடுகபாளையத்தில் கடன் வழங்கக் கோரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை மனு கொடுத்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வடுகபாளையம் பகுதியில் வாழும் பெண்கள் கரோனா காலத்தில் வேலையின்றி 6 மாதங்களுக்கும் மேலாக வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வருகிறோம். எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்படும் சிறு வணிகக் கடன் அல்லது வியாபார கடன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க இயக்குநா் சி. சின்னச்சாமி, ஊராட்சி 6ஆவது வாா்டு உறுப்பினா் கே.ராமசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் ஆா்.பழனிசாமி, பொன்னுசாமி மற்றும் பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT