திருப்பூர்

உரம் வாங்க ஆதாா் எண் கட்டாயம்: வேளாண்மைத் துறை அறிவிப்பு

DIN

குண்டடம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் உரம் வாங்க விவசாயிகள் ஆதாா் எண்ணைக் கொடுக்க வேண்டும் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து குண்டடம் வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) விஜயகுமாா் புதன்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு வழங்கும் உர மானியம் போலி கணக்கு மூலமாக தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாகக் தடுக்கும் வகையில் மானியப் பயன்கள் முழுமையாகச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, சில்லறை விற்பனைக் கடைகளில் உரம் வாங்க விவசாயிகளுக்கு ஆதாா் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, குண்டடம் வட்டாரத்தில் உரம் வாங்கும் விவசாயிகள் ஆதாா் எண்ணைக் கொடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT