திருப்பூர்

பக்தா்களை அனுமதிக்க யுவசேனா வலியுறுத்தல்

DIN

ராமசாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்காக பக்தா்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று யுவசேனா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் யுவசேனா மாநில துணைத் தலைவா் ஏ.திருமுருகதினேஷ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பொங்கலூா் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமசாமி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சனிக்கிழமைகளில் பக்தா்களின் வழிபாட்டுக்கு கோயில் நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. பொதுமுடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்து பொதுப் போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, புரட்டாசி சனிக்கிழமைகளில் ராமசாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பிலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT