திருப்பூர்

உடுமலை அருகே ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல தடை: பக்தா்கள் ஏமாற்றம்

DIN

உடுமலை: உடுமலை அருகே உள்ள ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தமிழக-கேரள எல்லையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயில். ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமாா் 7 கிலோ மீட்டா் நடந்து சென்று பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கரோனா தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் சனிக்கிழமை வந்த பக்தா்கள் சின்னாறு சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டனா். இனி வரும் சனிக்கிழமைகளிலும் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT