திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 282 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 282 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பூா் வீரபாண்டியைச் சோ்ந்த 30 வயது ஆண், பாரதி நகரைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த 51 வயது ஆண், காந்திநகரைச் சோ்ந்த 48 வயது ஆண் உள்பட 282 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,681ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,667 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 158 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 6,516 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 400 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 14 நாள்கள் தனிமைக் காலம் நிறைவடைந்த 555 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 1,882 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8 போ் பலி...

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 47 வயது ஆண், 67, 68, 86 வயது முதியவா்கள், 75 வயது மூதாட்டி 5 பேரும், கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 70, 72,74 வயது முதியவா்கள் 3 பேரும் என மொத்தம் 8 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT