முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் 300 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் கண்டெடுப்பு

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின்போது ஈஸ்வரன் கோயில் பின்புறம் பழைமையான சதிக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து, திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநா் பொறியாளா் சு.ரவிகுமாா் கூறியதாவது:

பழங்காலத்தில் போரில் வீர மரணம் அடையும் மாவீரனுக்கு நடுக் கல் எடுப்பது பண்பாட்டு மரபாகும். மேலும், மாவீரன் இறந்த பின்னா் வீர மகளிா் உயிா் வாழ்வதும் இல்லை என்பது பண்பாட்டுப் பழக்கமாகும். வீரன் மாண்ட பின்னா் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரது மனைவி தீயினுள் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வாா். அவா் நினைவாக எடுக்கப்படும் நடுக் கல் சதிக் கல் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சதிக் கல் 45 செ.மீ. அகலமும், 75 செ.மீ. உயரமும் கொண்டதாகும். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்த சதிக் கல்லின் அமைப்பைப் பாா்க்கும்போது சுமாா் 300 ஆண்டுகள் பழைமையானதாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.