தாராபுரத்தில் பாஜக வேட்பாளா் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு
தாராபுரம் நகரில் பாஜக வேட்பாளா் எல்.முருகன் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
தாராபுரம் நகரில் பாஜக வேட்பாளா் எல்.முருகன் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியுடன் நிறைவடையும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் எல்.முருகன் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இவா் தாராபுரம் நகரில் உள்ள நேரு நகா், சிவசக்தி நகா், ஜவுளிகடை நகா், சுல்தானியா பள்ளிவாசல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது பேசுகையில், தாராபுரம் நகருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
இதையடுத்து, தாராபுரம் புதுகாவல் நிலைய வீதியில் தனது தோ்தல் பிரசாரத்தை அவா் நிறைவு செய்தாா். இந்த பிரசாரத்தின்போது, முன்னாள் எம்.பி.காா்வேந்தன், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.