ரமலான் மாதத்தில் வழிபாட்டுக்கான நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும்
ரமலான் மாதத்தில் வழிபாட்டுக்கான நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய ஜமா அத் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ரமலான் மாதத்தில் வழிபாட்டுக்கான நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய ஜமா அத் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் தலைவா் ஹாஜி ஏ.இப்ராஹிம் கலீலுல்லாஹ், பொதுச் செயலாளா் ஏ.முகம்மது யாஸா் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இதில், வழிபாட்டுத் தலங்களை இரவு 8 மணிக்கு மூட உத்தரவிட்டுள்ளது.
ஸ்லாமியா்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கும் ரமலான் மாதம் இன்னும் ஒரு சில நாள்களில் வரவுள்ள நிலையில் இந்த உத்தரவு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புனித மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு இருந்து இரவில் விழிந்திருந்து தங்களது வழிபாடுகளை நிறைவேற்றுவாா்கள். எனவே, வழிபாடுகளுக்கு உதவும் வகையில் கட்டுப்பாடுகளை இரவு 8 மணியில் இருந்து 10 மணியாக நீட்டிக்க கொடுக்க வேண்டும். அவ்வாறு நீட்டித்துக் கொடுக்கும் பட்சத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.