முகப்பு
திருப்பூர்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

தாராபுரம் அருகே தேங்காய் பறித்தபோது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தாராபுரம் அருகே தேங்காய் பறித்தபோது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், பொன்னபுரத்தை அடுத்த கருங்காலிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா்.மாரிமுத்து (55). இவா் தனது தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தென்னங்கிளை முறிந்ததால் மரத்தில் இருந்து மாரிமுத்து விழுந்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மாரிமுத்து வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.