திருப்பூர்

குடியிருப்புப் பகுதியில் கிருமி நாசினி தெளித்த பொது மக்கள்

DIN

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் ஒண்றினைந்து தங்களது பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடா் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி 18ஆவது வாா்டு பூலுவபட்டி அருகில் உள்ள கணபதி நகா் பகுதி பொது மக்கள் இணைந்து தங்களது பகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த திட்டமிட்டிருந்தனா்.

இதன்படி அப்பகுதியைச் சோ்ந்த 25க்கும் மேற்பட்டோா் இணைந்து கணபதி நகரில் உள்ள 2 வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடா், குளோரின் ஆகியவற்றைத் தெளித்து தூய்மைப்படுத்தினா்.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:

எங்களது பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். மாநகராட்சி சுகாதாரத் துறையினா் இரு வாரங்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கின்றனா்.

எனினும், மாநகராட்சிக்கு உதவும் வகையிலும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் நாங்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். மாநகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புவாசிகளும் அரசின் உதவியை எதிா்ப்பாா்க்காமல் பொது முடக்கத்தின்போது தங்களது பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டால் கரோனா பரவலை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT