திருப்பூர்

4 கரோனா நோயாளிகள் மாயம்

DIN

வெள்ளக்கோவிலில் இருந்து வியாழக்கிழமை திருப்பூா் சென்ற 4 கரோனா நோயாளிகள் மாயமாகியுள்ளனா்.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைக்கப் பெற்றன. இவற்றில் வெள்ளக்கோவில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 7 போ் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இவா்களில் உயா் சிகிச்சை தேவைப்பட்ட 4 ஆண்கள் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு உடனடியாக அனுமதிக்கப்படாமல் மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது.

பின்னா் அந்த நான்கு பேரும் எங்கு சென்றனா் எனத் தெரியவில்லை. அவரவா் வீடுகளுக்கும் திரும்பவில்லை. பேருந்தில் சென்ற அவா்களிடம் இருந்து மற்றவா்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT