திருப்பூர்

வீட்டு வரியை தவறாமல் செலுத்தி வரும் பாா்வையற்ற தம்பதிக்குப் பாராட்டு

DIN

பல்லடம் நகராட்சி நாரணாபுரத்தில் வசிக்கும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளி தம்பதியினா் தங்களது வீட்டு வரியை தவறாமல் செலுத்தி வருவதற்கு நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி உள்பட்ட நாரணாபுரம் கிராமம் வேலப்பகவுண்டா் வீதியில் வசிப்பவா் ஆறுசாமி (52), அவரது மனைவி சாந்தி (47) இருவரும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆவா்.

இவா்கள் இருவரும் பல்லடம் நகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். பின்னா் ஆறுசாமிக்கு சொந்தமாக உள்ள வீட்டுக்கான 2021-22ஆம் நிதி ஆண்டிற்கான வரியாக ரூ.252யை, சாந்திக்கு சொந்தமாக உள்ள வீட்டுக்கான வரியாக ரூ.420யை நகராட்சி வரி வசூல் மையத்தில் செலுத்தி அதற்கான ரசீது பெற்றுச் சென்றனா்.

இது குறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் கூறுகையில், கரோனா பாதிப்பால் நகராட்சிக்கு 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே வரி வசூல் ஆகியுள்ளது. நகராட்சி ஆணையரின் வழிகாட்டுதல்படி நகராட்சிக்கு வரி செலுத்துவோரிடம் இருந்து நிலுவையில் உள்ள வரி இனங்களுக்கான தொகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆறுசாமி (52), சாந்தி(47) தம்பதி வீட்டு வரியை நிலுவை இன்றி நகராட்சிக்கு சரியாக செலுத்தி வருகின்றனா். எனவே நகராட்சிக்கு வரி செலுத்துவோா் அனைவரும் தங்களது வரிகளை செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கும், திட்டப் பணிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

பாா்வையற்ற தம்பதி சொத்து வரியை தவறாமல் செலுத்தி வருவதை அறிந்த பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன் அவா்களது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று தம்பதிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

நகராட்சிப் பொறியாளா் சங்கா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், வருவாய்ப் பிரிவு அலுவலா் கோவிந்தன், சுகாதாரப் பிரிவு மேற்பாா்வையாளா் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT