முகப்பு
திருப்பூர்

லஞ்சம்: பெண் வட்ட வழங்கல் அலுவலா் உள்பட 3 போ் கைது

பல்லடத்தில் லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் அலுவலா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பல்லடத்தில் லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் அலுவலா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள மண்ணெண்ணெய் விற்பனையாளா் வெங்கடாசலம் (41) என்பவரிடம் 3 கடைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அனுப்பிவைக்க கடை ஒன்றுக்கு தலா ரூ. 800 வீதம் ரூ. 2400 லஞ்சம் கொடுக்குமாறு வட்ட வழங்கல் அலுவலா் கேட்டுள்ளாா். இது குறித்து திருப்பூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் வெங்கடாசலம் புகாா் தெரிவித்துள்ளாா்.

போலீஸாரின் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பல்லடம் வட்ட வழங்கல் அலுவலா்

கிருஷ்ணவேணி ( 40), வட்ட வழங்கல் ஆய்வாளா் கோபிநாத் ( 39 ), தற்காலிக பணியாளா் ஜெகநாதன் ( 44 ) ஆகியோரிடம் வழங்கியபோது அப்பகுதியில் மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் தட்சணாமூா்த்தி, ஆய்வாளா் வினோதினி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் அவா்களை கையும்களவுமாக

பிடித்தனா். மேலும் லஞ்சம் வாங்கிய 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2400ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.