திருப்பூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய சிறப்பு முகாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யும் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் திருப்பூா் மாநகராட்சி, அவிநாசி, உடுமலைப்பேட்டை மற்றும் பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஆகவே தகுதியுள்ள பயனாளிகள் கண்டறியும் வகையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 19, 26ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் உரிய சான்றிதழ்களுடன் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT