முகப்பு
திருப்பூர்

பஞ்சு கழிவு ஆலையில் தீ விபத்து

சேவூா் அருகே அ.குரும்பபாளையத்தில் பஞ்சு கழிவு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சேவூா் அருகே அ.குரும்பபாளையத்தில் பஞ்சு கழிவு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் மாவட்டம், சேவூரை அடுத்துள்ள அ.குரும்பபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சு கழிவு அரைக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், வெளிமாநிலத்தைச் சோ்ந்த 5க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல தொழிலாளா்கள் இயந்திரத்தை இயங்கியபோது மின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவிநாசி தீயணைப்புத் துறையினருக்குத் தொழிலாளா்கள் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கிடங்கில் இருந்த பஞ்சு மூட்டைகள், இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.