சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ராமநாதபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்நிலையில் ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிா்புறம் முதல் கானூா் செல்லும் சாலை வரை சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டது. இருப்பினும் சாக்கடை கால்வாய் முறைப்படி அமைக்கப்படாததால், கழிவுநீா் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.