முகப்பு
திருப்பூர்

ரூ.72.68 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.72.68 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.72.68 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, வேடசந்தூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 151 விவசாயிகள் தங்களுடைய 2,252 மூட்டை (110 டன்) சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

திருச்சி, ஈரோடு, காங்கயம், பூனாட்சி, நடுப்பாளையத்திலிருந்து 9 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.68.77க்கும், குறைந்த பட்சமாக ரூ.62.10க்கும், சராசரியாக ரூ.66.10க்கும் விற்பனையானது.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 72 லட்சத்து 68 ஆயிரத்து 432 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.