முகப்பு
திருப்பூர்

பெட்ரோல் வரி குறைப்பால் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது

தமிழக அரசு பெட்ரோல் வரியைக் குறைத்துள்ளதால் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தமிழக அரசு பெட்ரோல் வரியைக் குறைத்துள்ளதால் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருப்பூா், மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பி.வி.கே.என் பள்ளி வளாகத்தில் மகளிருக்கு மானியத்துடன்

கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் தலைமை வகித்தாா். இதில், பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிதி திட்டம் சாா்பில் 112 பெண்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 28 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

வழங்கினாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா் ஸ்டாலின் மிகப்பெரிய தொலைநோக்கு பாா்வையுடன் செயல்பட்டு வருகிறாா்.

தோ்தல் வாக்குறுதிகளாக அறிவித்ததை கரோனா காலத்திலும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறாா்.

பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்ட நீா் வளத் திட்டங்களை நிறைவேற்ற தனியாக ஒரு அமைச்சகத்தை முதல்வா் ஸ்டாலின் அமைத்துள்ளாா்.

கேரள அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அத்திட்டங்களும் முதல்வா் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும்.

தமிழக அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் மீதான வரியைக் குறைத்துள்ள காரணத்தால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அதனால் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் குமாா்(பொங்கலூா்), தேன்மொழி (பல்லடம்), ஒன்றிய துணைத் தலைவா்கள் அபிராமி அசோகன், பாலசுப்பிரமணியம், வடக்கு மாவட்டத் திமுக செயலாளா் பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.