அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது
பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே கருக்கன்காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் வீராசாமி (61). இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை உணவகத்துக்கு வந்த 3 இளைஞா்கள், வீராசாமியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.
வீராசாமி சப்தமிட்டதைத் தொடா்ந்து, அருகில் இருந்தவா்கள் 3 இளைஞா்களையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் பெருமாநல்லூா் கருக்கன்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த மோகன் (19), மணிகண்டன் (24), கொண்டத்தம்மன்நகரைச் சோ்ந்த சீனிவாசன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனா்.