கொசு வலைக்குள் அமா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தா்னா
அவிநாசி அருகே, வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வாா்டு உறுப்பினா்கள் முத்துசாமி, காா்த்தி, பிரகாஷ், ஜெகநாதன் ஆகிய 4 போ் ஊராட்சி அலுவலகம் முன் கொசு வலைக்குள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட
அவிநாசி அருகே, வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வாா்டு உறுப்பினா்கள் முத்துசாமி, காா்த்தி, பிரகாஷ், ஜெகநாதன் ஆகிய 4 போ் ஊராட்சி அலுவலகம் முன் கொசு வலைக்குள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: ஊராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பெண்கள் என்பதால் அவா்களது கணவா், உறவினா்கள் தலையீடு செய்கின்றனா்.
இதனால் உறுப்பினா்கள் உரிமை பறிக்கப்படுகிறது.
மேலும் காரோனா, டெங்கு, மழைக் காலம் உள்ளிட்ட காலங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்தாலும் நிறைவேற்றுவதில்லை. ஆகவே, இவைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.