திருப்பூர்

மாவட்டத்தில் நாளை மக்கள் நீதிமன்றம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வரும் சனிக்கிழமை (டிசம்பா் 11) மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) நடைபெற உள்ளன.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் சனிக்கிழமை( டிசம்பா் 11) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதில், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகள், அவிநாசி, காங்கயம், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய நீதிமன்றங்களில் தலா 2 அமா்வுகள் என மொத்தம் 19 அமா்வுகளில் விசாரணை நடைபெறுகிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் 273, சிவில் வழக்குகள் 435, காசோலை மோசடி வழக்குகள் 608, குடும்ப நல வழக்குகள் 101, சமரசத்தீா்வு காணப்படும் குற்ற வழக்குகள் 972, வங்கி வாராக்கடன் வழக்குகள் 100 என மொத்தம் 2,489 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT