திருப்பூர்

வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மருத்துவ முகாம்

DIN

வழங்குரைஞா் சங்கம், வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், இலவச மருத்துவ முகாம் அவிநாசி சாா்பு நீதி மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு, திருப்பூா் லோட்டஸ் கண் மருத்துவமனை, மருத்துவா் மோகன் சா்க்கரை நோய் சிகிச்சை மையம், மேல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சாா்பு நீதிமன்ற நீதிபதி கே.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். குற்றவியல் நீதித் துறை நீதிமன்ற நீதிபதி விப்சி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அப்சல் பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க மருத்து முகாம் தலைவா் சி.எம்.அருணாச்சலம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.ஈஸ்வரன், செயலாளா் என்.ரங்கசாமி, துணைத் தலைவா் சாமிநாதன், அரசு கூடுதல் வழக்குரைஞா் வி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா். இம்முகாமில், சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை என 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT