திருப்பூர்

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட நல்லூா் காவல் துறையினா் செவந்தாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த நால்வரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், வங்கதேசத்தைச் சோ்ந்த ஏ.பரிடோல் இஸ்லாம் (24), எம்.ரிடோய் ஹூசைன் ரிபாட் (23), ஏ.சிமுள் ரஹ்மான் (27), பி.ரேகான் (26) என்பதும், செவந்தாம்பாளையம் பகுதியில் தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், இவா்களிடம் நுழைவு இசைவு சீட்டு (விசா), கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT