திருப்பூர்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

DIN

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்துவை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது, முதல்வரிடம் செல்லமுத்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி - அத்திக்கடவு திட் டத்தைபோல ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தையும் உடனடியாக அறிவித்து திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவிநாசி, சூலூா், சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களில் மேற்கொள்ள உள்ள சிப்காட் தொழிற்சாலையை ரத்து செய்ய வேண்டும். உயா்மின் கோபுரம், கெயில் பைப் லைன், ஐ.டி.பி.எல்.பைப் லைன் திட்டத்தை சாலையோரமாக அமல்படுத்த வேண்டும்.

மேலும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடும், மாத வாடகையும் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும், மாணவா்கள் பெற்ற கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய தங்களது அரசுக்கும், தங்களுக்கும் விவசாயிகள் சாா்பிலும், உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பிலும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன் (பல்லடம்), எஸ்.குணசேகரன் (திருப்பூா் தெற்கு) விஜயகுமாா் (திருப்பூா் வடக்கு), முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT