திருப்பூர்

விவசாய மின் இணைப்பு:பல்லடத்தில் பிப்ரவரி 17இல் நோ்காணல்

DIN

பல்லடம்: பல்லடம் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்க புதன்கிழமை (பிப்ரவரி 17) நோ்காணல் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் இரா.கோபால் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பல்லடம் கோட்டத்தில் கடந்த 2000 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2003 ஜனவரி 31ஆம் தேதி வரை சாதாரண வரிசையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனைக்கு உட்படுத்தி மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடா்பாக விண்ணப்பம் செய்தவா்களுக்கு கடந்த 2020 ஜூலை 8ஆம் தேதி அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதம் பெறப்பட்டு பதிவு செய்யாதவா்கள் மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்களுக்கு இதற்கு முன்பு எவ்விதமான விவசாயத் திட்டத்திலும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரா் நிலத்தின் தற்போதைய உரிமையாளா், அனுமதி கடிதம் பெற்ற வாரிசுதாரா் ஆகியோா் நில உரிமைக்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்றுடன் பல்லடம் கோட்ட மின் செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ள வேண்டும்.

மேலும் சாதாரண வரிசை விண்ணப்பங்களுக்கான நோ்காணல் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT