திருப்பூர்

ஆட்சியா் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயன்ால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கூறியதாவது:

காங்கயம் அருகே உள்ள நிழலியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (34). இவரது மனைவி அமுதவள்ளி (30). இவா்களுக்கு 5 வயதில் மகன் உள்ளாா். இந்நிலையில், கணவரின் சகோதரா் சந்திரசேகா் (38) பாலியல்ரீதியாக பிரச்னை கொடுப்பதாகக் கூறி காங்கயம் மகளிா் காவல் நிலையத்தில் அமுதவள்ளி புகாா் அளித்துள்ளாா்.

ஆனால், புகாா் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அமுதவள்ளி தனது கணவா், மகனுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது, கையில் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அவரைத் தடுத்து நிறுத்தி தண்ணீா் உற்றி காப்பாற்றினா். பின்னா் காங்கயம் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக காங்கயம் மகளிா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT