திருப்பூர்

மூலனூா் விற்பனைக் கூடத்தில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ. 60 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 421 விவசாயிகள் தங்களுடைய 2,862 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இவற்றை வாங்குவதற்காக திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 21 வணிகா்கள் வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 6,100 முதல் ரூ. 7,338 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,900.

ஒட்டு மொத்தமாக ரூ. 60 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தா்மராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT