திருப்பூர்

திருப்பூரில் 4,200 உடைந்த முட்டைகள் பறிமுதல்

DIN

திருப்பூா்: திருப்பூரில் சாலையோரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 4,200 உடைந்த முட்டைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் அவிநாசி சாலையில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், தண்ணீா்பந்தல் பகுதியில் நின்று கொண்டிருந்த முட்டை வாகனத்தில் ஆய்வு செய்தனா். இதில், நாமக்கல், கரூா், பரமத்தி பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து உடைந்த முட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக சந்திரசேகா் (42) என்பவா் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், உடைந்த நிலையில் இருந்த 4,200 முட்டைகளைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT