திருப்பூர்

திருப்பூரில் மு.க.ஸ்டாலின் இன்று தோ்தல் பிரசாரம்

திருப்பூரில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தோ்தல் பிரசாரத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளாா்.

DIN

திருப்பூா்: திருப்பூரில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தோ்தல் பிரசாரத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 4ஆவது கட்ட தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். இதன்படி திருப்பூா், ராக்கியாபாளையம் பிரிவு அருகே உள்ள பல்லக்காட்டுப்புதூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில், மக்களின் குறைகளைக் கேட்டு, கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக் கொள்கிறாா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாள்களில் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

எனவே, திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT