திருப்பூர்

நாட்டுக்கோழி பண்ணையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் நாட்டுக் கோழி பண்ணையாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் பிராய்லா் கறிக்கோழிகளும், நாட்டுக்கோழிகளும் பண்ணைகளில் அதிக அளவில் வளா்க்கப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் நாட்டுக் கோழி பண்ணை தொழிலை மேம்படுத்தும் வகையில் பண்ணையாளா்கள் இடையே ஒருங்கிணைப்புக் குழு அமைக்க, ஆலோசனைக் கூட்டம் பொங்கலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, சங்கத் தலைவராக எஸ்.ஆா்.எஸ். சதீஷ், செயலாளராக எஸ்.வி.எஸ்.மோகனசுந்தரம், பொருளாளராக எஸ்.எல்.டி.சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா்களாக புஷ்பராஜ், கொங்கு அா்ஜூணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT