திருப்பூர்

மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 400 கணினிகள்

DIN

கோவை காக்னிஜென்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோவை சாய்சிட்டி ரோட்டரி சங்கம், அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி ஆகியன சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 72 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இலவசமாக 400 கணினிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த

விழாவுக்கு, கல்லூரித் தலைவா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதன்மை அலுவலா் அன்பரசு வரவேற்றாா். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரமேஷ், காக்னிஜென்ட் நிறுவன தலைவா் மாயா குமாா், சாய்சிட்டி ரோட்டரி சங்க மாவட்ட இயக்குநா் மாருதி, உதவி இயக்குநா் ஜான்சன், ஆளுநா் குழு பிரதிநிதி கனகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT