திருப்பூர்

காவல் துறையினா் வாகன சோதனை

DIN

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் 16 இடங்களில் காவல் துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருப்பூா் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல் துறையினா் தடை விதித்திருந்தனா். மேலும், மாநகரில் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, கோயில்வழி, எஸ்ஏபி பேருந்து நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, கல்லூரி சாலை, அம்மாபாளையம் உள்ளிட்ட 16 இடங்களில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், வியாழக்கிழமை நள்ளிரவு வாகனங்களில் வந்த நபா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். மாநகரில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கேக் வழங்கி உற்சாகமூட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT