முகப்பு
திருப்பூர்

கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காங்கயம் வட்டம், மறவபாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களது கிராமத்தில் தனி நபா் சாா்பில் புதியதாக கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களாகிய எங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் கிராமத்தில் கல்குவாரி அமைத்தால் நேரடியாக பல பாதிப்புகள் ஏற்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கால்நடை வளா்ப்போரும் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே எங்கள் பகுதியில் கல் உடைக்கும் இயந்திரங்களால் வெளிப்படும் புகை, தூசி காரணமாக சுவாசக் கோளாறு, வீடுகளில் விரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, கல்குவாரி அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதுடன், ஏற்கெனவே செயல்பட்டு வரும் இரு கல்குவாரிகளையும் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவா் தமிழ்நேசன், தலைமை நிலையச் செயலாளா் செல்வகுமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டையைத் தடை செய்யாமல் அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சேவல்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், கல்லூரி சாலை கே.ஆா்.இ.லே.அவுட் பகுதியில் பள்ளிவாசல், கோயில், பொதுமக்கள் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி திறக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபானக்கூடமும், சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த கேளிக்கை விடுதியால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. எனவே, கேளிக்கை விடுதியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.