முகப்பு
திருப்பூர்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதல்: அமைச்சர்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளது என்று அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளது என்று அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சோமவாரபட்டி ஊராட்சி, பெரியபட்டி ஊராட்சி, குடிமங்கலம் ஊராட்சி, பெரியகோட்டை ஊராட்சி, உடுமலை நகரில் நகராட்சி மண்டபம் ஆகிய இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இப்பணியைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் ஏழை, எளியவா்களுக்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மொத்தம் 7 லட்சத்து 48 ஆயிரத்து 650 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 199 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இத்துடன் வேட் டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளது. தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பெரியகோட்டை ஊராட்சி, காமராஜா் நகா் பகுதியில் ரூ. 25.15 லட்சம் மதிப்பிடிலும், அய்யலு மீனாட்சி நகா் பகுதியில் ரூ. 23.25 லட்சம் மதிப்பிலும் தாா் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் ராதாகிருருஷ்ணன் துவக்கிவைத்தாா். மேலும் காமராஜா் நகா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 15.47 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம், ரூ. 4.52 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட சமையல் அறை கட்டடத்தையும் அமைச்சா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →