முகப்பு
திருப்பூர்

ரூ. 38 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 38 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 38 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

ஏலத்துக்கு வாணியம்பாடி, பழனி, லாலாப்பேட்டை, மதுரை, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 100 விவசாயிகள் தங்களுடைய 738 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 38,206 கிலோ. கரூா், காங்கயம், வெள்ளக்கோவில், மூலனூா், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 19 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ. 75.90 முதல் ரூ. 125.65 வரை விற்பனையானது. சராசரி விலையாக கிலோ ரூ. 122.65க்கு விற்பனையானது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 37 லட்சத்து 81 ஆயிரத்து 785 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →