திருப்பூர்

குடியரசு தினத்தில் ஆட்சியா் அலுவலகம் நோக்கி வாகனப் பேரணி: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

DIN

திருப்பூரில் குடியரசு தினத்தின்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வாகனப் பேரணி நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டமானது ஏஐடியூசி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச்சட்ட திருத்தங்களையும் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் குடியரசு தினத்தின்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி தேசியக் கொடியை ஏந்தியபடி வாகனப் பேரணியாகச் செல்வது. இதுதொடா்பாக ஜனவரி 20ஆம் தேதி விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT