திருப்பூர்

முறியாண்டம்பாளையத்தில் கலாசாரம் மாறாத கிராமிய நிகழ்ச்சி

தைப் பொங்கல் திருநாளை ஒட்டி, சேவூர் அருகே முறியாண்டம்பாளையத்தில் கலாசாரம் மாறாத கிராமிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒயிலாட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

DIN


அவிநாசி: தைப் பொங்கல் திருநாளை ஒட்டி, சேவூர் அருகே முறியாண்டம்பாளையத்தில் கலாசாரம் மாறாத கிராமிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒயிலாட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட முறியாண்டம்பாளையம் ஊராட்சியில், பொங்கல் திருநாளை ஒட்டி, அப்பகுதி மக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொங்கல் வைத்தல், ஊர் கூடி பூப்பறித்தல் உள்பட நாள்தோறும் பாரம்பரியம் மாறாமல், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. நிறைவு நிகழ்ச்சியாக காமராஜர் நகர் மைதானத்தில், திங்கள்கிழமை இரவு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியை அவிநாசி ஒன்றியக் குழுத் தலைவர் அ. ஜெகதீசன் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ப. ரவிக்குமார், துணைத் தலைவர் எஸ். கனகராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 

மாவட்டக் குழு உறுப்பினர் சீத்தாலட்சுமி ஆனந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணகுமார், கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சோமனூர் அம்மன் கலைக் குழுவினரின் வள்ளிக் கும்மியாட்டம், பம்பையாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், சலங்கையாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. 

தமிழர்களின் பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

வேலூா், ராணிப்பேட்டைக்கு இன்று துணை முதல்வா் வருகை!

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மூத்த பெண் நக்ஸல் சரண்!

கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு: முதல்வா் நிதியுதவி

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT