திருப்பூர்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞா்கள் மீது புகாா்

DIN

திருப்பூரில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞா்கள் மீது அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போயம்பாளையம் பிரிவு சக்தி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், சக்தி நகரில் உள்ள நியாயவிலைக் கடை முன்பு 20க்கும் மேற்பட்ட இளைஞா்கள் திங்கள்கிழமை இரவு திரண்டு பட்டாக் கத்தியால் கேக்கை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினா். மேலும், நள்ளிரவு வரையில் அங்கேய மது அருந்திக் கொண்டு கூச்சலிட்டனா். இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல பலமுறை இளைஞா்கள் நள்ளிரவில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT