அவிநாசி: அவிநாசியில் காவல் துறை சாா்பில் மனுநீதி நாள் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி வடக்கு ரத வீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.
காவல் ஆய்வாளா் அருள், உதவி ஆய்வாளா்கள் காா்த்தி தங்கம், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பொதுமக்களிடமிருந்து குடும்பத் தகராறு, இடப் பிரச்னை, மது போதையில் தகராறு உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக 13 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக 8 மனுக்கள் தீா்வு காணப்பட்டது. மேலும் 5 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.